Monday, June 2, 2014

நியூ யார்க் பயணக் கட்டுரை - 6

லிபர்ட்டி சிலை இருப்பது மன்ஹாட்டன் நகரின் தெற்கு கரையில். அங்கிருந்து கரைக்கு வந்து சிறிது தாரம் நடந்தால் ஃபினான்ஸியல் டிஸ்ட்ரிக்ட். வால் ஸ்ட்ரீட், உலக வர்த்தக மையம். விமானத்தால் தீவிரவாத நாச வேலைக்கு உள்ளான பழைய இரட்டை கோபுரங்களின் நினைவிடம் அங்கே தான் உள்ளது. முதலில் வால் ஸ்ட்ரீட் நடந்து சென்றோம்.

வால் ஸ்ட்ரீட் போகும் வழியிலேயே 'ஜார்ஜிங் புல்லின்' - துரத்தும் காளையின் உலோக சிலை இருந்தது. அதை யாரை துரத்துகிறது என்று தெரியாது. தினவுடன், முரட்டு தனமான உறுதியான காளை கோபத்துடன் துரத்துகிறது. இது அமெரிக்க பங்கு சந்தையின் உருவகம். அந்த பங்கு சந்தையின் திடமான ஆனால் கணிக்க முடியாத தன்மையை குறிக்கிறது. இதை சில இந்தி படங்களில் பார்த்திருக்கிறேன். நியூ யார்க்கை குறிப்புனர்த்த இது காட்டப்படும். ஆனால் அதன் முன் நின்று புகைபடம் எடுத்து கொள்ள பெரும் வரிசை நின்று கொன்டு இருந்தது. இதுக்கு கூட வரிசையா என்று தோன்றியது. அப்படி வரிசையில் நின்று எடுக்குமளவுக்கு இது முக்கியமில்லை என்றும் தோன்றியது. ஷாலினி வரிசையை கண்டு எரிச்சல் அடைந்து காளையின் பக்கவாட்டில் நின்று எடுத்து கொன்டால். அவளுக்கு அது முக்கியம், பொருளாதாரம் தொடர்பான படிப்பும் வேலையும் என்பதால். காளையை தத்துருபமாக வடித்திருந்தார்கள். சில வெள்ளை இளைஞர்கள் காளையின் பின் பக்கத்தில் குனிந்தும், காளையின் விரையை கையில் ஏந்தியவாரும் எடுத்து கொன்டனர். இந்திய இளைஞர்களுக்கு சற்றும் சளைக்காதவர்கள் அல்ல.

ஜார்ஜிங் புல்
அங்கிருந்து நகர்ந்து வால் ஸ்ட்ரீட் அருகில் நடந்தோம். ஷாலினி வால் ஸ்ட்ரீட் வழிகாட்டி தகட்டின் கீழ் நின்று புகைபடம் எடுத்து கொன்டாள். வால் ஸட்ரிட் என்பதால் ஒரு பிரம்மான்டமான எண்னமே மணதில் இருந்தது. உலக வரலாற்றில் ஒரு முக்கிய இடம் அதற்கு உண்டு. ஆனால் அந்த வீதி அவ்வளவு பிரம்மான்டமாய் இல்லை. வீதியின் அகலம் சாதாரனமாகவே இருந்தது. பெரும் பொருளாதார நிறுவனங்களின் அலுவலகங்கள் இருந்தது. எனக்கு அதிகம் எதுவும் தெரியவில்லை. ஷாலினிக்கு சில அடையாளம் தெரிந்தது. எனக்கு அங்கே நியூ யார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் மட்டும் தான் கேள்வி பட்ட பெயராக இருந்தது. வீதி வெகு சாதாரனாமாக இருந்தாலும் அங்கிருந்த கட்டிடங்களும் அதன் அமைப்பு முறையும் கம்பிரமாக இருந்தது. கட்டிடங்களின் முன் சுவரில் நுட்பமான வேலைப்பாடுகள் செய்யப்பட்டுருந்தது. நல்ல மண் நிற கல் கட்டங்கள் பார்க்க அழகாக இருந்தது.

கரையின் அருகில் இருந்ததால் வால் ஸ்ட்ரீட்  300 ஆண்டுகளுக்கு முன்னேரே ஒரு வணிக மையமாக விளங்கி இருக்கிறது. அதனுடன் இந்த வீதி, அடிமைகளை விற்கும் சந்தையாகவும் இருந்திருக்கிறது. அமெரிக்கவை வளத்தெடுத்த பிதாமகர்களின் ஒருவர், அமெரிக்க புரட்சி போரின் தளபதி, அமெரிக்காவின் முதல் குடியரசு தலைவரான ஜார்ஜ் வாஷிங்க்டன் 1789ல் பதவிபிரமானம் எடுத்து கொன்ட ஃபெடரல் ஹால் இங்கு தான் இருக்கிறது. அதன் நினைவாக இப்போது அங்கு ஜார்ஜ் வாஷிங்க்டனின் நினைவு சின்னம் இருக்கிறது.

ஃபெடரல் ஹால்
மேலும் வீதியின் உள் நடந்து சுற்றி பார்த்தோம். ஆங்காங்கே சில கட்டிடங்களின் வரலாற்று சிறப்பை எழுதி போட்டிருந்தார்கள். அப்படியே அந்த விதியில் இருந்து வெளியே வந்தால், முச்சந்தியில் ட்ரினிட்டி தேவாலயம் இருந்தது. சீரமைப்புகாக மூடப்பட்டிருந்தது. அங்கிருந்து 911 நினைவிடத்திற்கு சென்றோம். இரட்டை கோபுரங்கள் நின்ற இடம். அந்த இரு கோபுரங்களும் இடிந்து விழுந்த இடத்தில் இரு அகன்ற சதுர குழியை அமைத்திருக்கிறார்கள். அதில் குழியில் கரும்பளிங்கு கற்கள் பதித்திருக்கிறார்கள. குழியில் தன்னிர் ஊற்று அமைத்திருக்கிறார்கள். அந்த குழியின் நடுவே இன்னோரு குழி ஆழமாய், அடித்தரை கண்ணுக்கு தெரியாதது போல் செல்கிறது. அதனுள் தண்ணிர் வழிந்து செல்கிறது.

அந்த நினைவகத்தை சுற்றி இருந்த இடுப்பளவு சுவற்றில் அந்த விபத்தில் இறந்தவர்களின் பெயர்களை செதுக்கி வைத்துள்ளார்கள். அதில் பல இந்திய பெயர்களும் இருந்தது. அதை ஒட்டியே அந்த விபத்தின் அருங்காட்சியகம் இருந்தது. மாலையாகி விட்டதால் மூடப்பட்டிருந்தது. அருகிலேயே புதிதாய் கட்டபட்ட புது உலக வர்த்தக மையம் இருக்கிறது.  நினைவகத்தின் அருகில் இன்னும் சில கட்டுமான பனிகள் நடந்து கொன்டுதான் இருந்தது. நிறைய காவலர்கள் நின்று கொன்டு இருந்தார்கள். யாரோ அந்த நினைவிடத்தில் ஒரு பூங்கோத்து வாங்கி வைத்திருந்தார்கள். பார்த்துவிட்டு அகன்று நடந்து வந்த போது இந்திய முகங்களுடன், ஒரு இஸ்லாமிய குடும்பம் குழந்தைகளோடு நின்று கொன்டு இருந்தார்கள். அவர்கள் மனதில் என்ன ஓடும்? நிச்சயம் என் மனதில் ஓடிய நினைவுகளாக தான் இருக்கும்.

911 நினைவகம்
அடுத்து எங்கே போவது? நியூ யார்க் வந்தால் பார்ப்பதற்காக சுற்றுலா தளங்கள் இருக்கும், ஆனால் உன்மையான ஊரை எப்படி சுற்றி பார்ப்பது. மேப்பை எடுத்து பார்த்தோம். சைனா டவுன், லிட்டில் இட்டாலி ஆர்வத்தை தூன்டியது. அமெரிக்க வந்தும் அந்நாட்டு மக்கள் தங்களுக்கு என்று ஒரு பகுதியை நிறுவி கொன்டு வாழ்கிறார்கள். அமெரிக்கர்களுக்கு மத்தியில் வாழும் குடும்பங்களை விட இப்படி கூட்டாக வாழும் மக்கள் அவர்களின் கலச்சாரத்தை இன்னும் வலுவாக பின்பற்றுவார்கள், அவர்களின் பிரத்யேக தேவைக்கான கடைகள் அங்கு உருவாகி இருக்கும். அங்கு செல்ல எந்த சப் வே ரயில் என்றும் தெரியவில்லை, காலும் கடுக்க ஆரம்பித்தது. எங்காவது சிறிது நேரம் உட்கார வேண்டும் போலிருந்தது. ஒரு சிறு இந்திய உணவகம் தென்ப்பட்டது அங்கு சென்று இரு சமோசாவும், மசாலா டீயும் சாப்பிட்டோம். பிறகு கிளம்பி சென்று ரயிலில் ஏறினோம். இரண்டு ரயில் மாறி செல்ல வேண்டும். ரயில் நிலையத்தில் ஒரு இளைஞன் கிடார் வாசித்து கொன்டு பாட துவங்கினான். சப் வே ரயில் தன்டவாளங்கள் அழுக்கும் குப்பையுமாய் எலிகள் ஓட இருந்தது.

சைனா டவுன் சென்று இறங்கினோம், ஒரே  சீன முகங்கள். திடீர் என்று சென்னையின் ஒரு கடைவீதியில் நுழைந்தது போலிருந்த்து. அமெரிக்காவில் வழக்கமாக பார்க்கும் கடைகள் போல அல்லாமல் சென்னை பான்டி பஜாரில் இருப்பது போன்ற கடைகள். நெருக்கமான கடைகள். மின் அலங்கார விளக்குகள் தொங்கி கொன்டு இருந்தது.  எல்லா கடை பெயர்களும் சீன மொழியிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்தது. அமெரிக்க கடைகள், சேஸ் பாங்க் அனைத்தும் சீன மொழியிலும் பெயர் எழுதப்பட்டிருந்தது. நிறைய நகை கடைகள் இருந்தது. சின்ன சின்ன துனி கடைகளில் பல முஸ்லிம் பெயர்களுடன், இந்திய முஸ்லிம் இளைகர்களுடன் இருந்தது. அந்நகரத்தின் சாலை நெரிசலை விட இங்கு அதிகமாகவும் இரைச்சலுடனும் இருந்தது போலிருந்த்து. அங்கு ஒரு கடையில் ஒரு சீனப்பென் வேடிக்கையான தனது ஆங்கில உச்சரிப்புடன் 'கம் இன் அன்ட் சீ' என்று அழைத்து கொன்டு இருந்தால்.
சைனா டவுன்




அப்படியே லிட்டில் இட்டாலி உள்ளே சென்றோம். இட்டாலி வீதி ஆரம்பித்ததுமே ரெஸ்டாரன்டுகள், பிட்சாரியாகள் தொடங்கிவிட்டது. பட்லர் உடையனிந்து உணவு பரிமாறி கொன்டிருந்தார்கள். கடைக்குள் மட்டுமில்லாமல் வீதீயின் திறந்த வெளியிலும் மேசைகள் போட்டிருந்தார்கள். உள்ளுர் மக்கள், இளைஞர்கள் பலர் அங்கு வந்து சாப்பிட்டு கொன்டு இருந்தார்கள். ஒரு நெடும் வீதி முழுக்க ஒரே ரெஸ்டாரன்டுகள் தான் வேறு கடையே பார்க்கவில்லை.

லிட்டில் இட்டாலி

 அந்த வீதியில் இருந்து இன்னும் உள்ளே சென்றதும் திருவிழா போல பாட்டும், ஒளியுமாய் ஒரு வீதியில் கடைகள் அமைத்திருந்தார்கள். உணவு கடை, ஆடை அணிகலன்கள், பொம்மைகள், விளையாட்டுகள் என்று வரிசையாக கடைகள். அங்கு ஒரியோ பிஸ்கட்டை மாவில் முக்கி என்னையில் தாலித்து தருகிறார்கள், நம்மூர் போன்டா போல. அதை சில வெள்ளையர்கள் வாங்கினார்கள். நம் வடை போல் ஒரு பண்டம் இருந்தது, அது என்ன என்று கேட்டேன், ஸெப்பொலி (Zeppole) என்றார்கள், இரண்டு டாலருக்கு இரண்டு என்று வாங்கினேன். சர்க்கரை மாவில் தொட்டு கொடுத்தார்கள். வெறும் மாவினால் செய்யப்பட்டது. உப்பு காரம் எதுவும் இல்லை. அதை சர்க்கரை மாவில் தொடாமல் சாப்பிட்டாலும் நன்றாக இருந்திருக்கும். இவர்கள் சிற்றுன்டியில் இனிப்பை தவிர வேறு சுவையை சேர்க்க மாட்டார்கள் போலிருக்கிறது. தொப்பி, கை பை, பொம்மை என பலவையும் விற்று கொன்டிருந்த இடத்தில் ஒரு விநாயகர் படம் போட்ட திரை துனியையும் விற்று கொன்டிருந்தார்கள்.


ஸெப்பொலி
அங்கிருந்து அப்படியே சோஹோ எனும் பகுதியின் வழியாக நடந்தோம். அந்த பகுதியில் அவ்வளவு ஆர்ப்பாட்டம் இல்லை. நிறைய டிசைனர் கடைகள் இருப்பதாக ஷாலினி சொன்னாள். அங்கு ஒரு பெஞ்சில் சற்று அமர்ந்தோம். அருகில் ஒருவர் ஜாஸ் இசையை ஸ்பீக்கரில் ஒலிக்கவிட்டு அமர்ந்திருந்தார். இரவு நேரங்களில் ஜோடியாக பல உள்ளுர்வாசிகள் வெளியே வருகிறார்கள். ஆண், பெண் இருவருமே கச்சிதமாக உடை அணிந்திருக்கிறார்கள். அவர்கள் அதற்கு எவ்வளவு நேரம் செலவளிப்பார்கள் என்று தான் எனக்கு தோன்றியது. நாயை நடைக்கு அழைத்து கொன்டு சிலர் சென்றனர்.  இரவு சாப்பிட்டுவிட்டு விடுதிக்கு திரும்பினோம்.

No comments:

Post a Comment